Showing posts with label ஆய்வுக்கட்டுரைகள். Show all posts
Showing posts with label ஆய்வுக்கட்டுரைகள். Show all posts

Wednesday, February 22, 2012

வன்னிப்பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும்.


பேராசிரியர்.இரா.சிவசந்திரன்

இலங்கையின் வன்னிப்பிரதேசம் 7859.3 சதுரக் கிலோமீற்றர் (2924 சதுரமைல்)பரப்பளவைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப்பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இக்கட்டுரை மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிரதேசமெனக் கொள்கிறது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதத்தையும் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாக வசதிக்காக பதினைந்து உதவிஅரசாங்கஅதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளன.

குடித்தொகை வளர்ச்சி 1871 முதல் 1981 வரை

இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட நாடு முழுவதற்குமான குடித்தொகைக் கணிப்பு 1871 இல் இடம்பெற்றது. இதன்பின் 1881, 1891, 1901, 1911, 1921, 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளில் குடித்தொகைக் கணிப்புகள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டிய இக் கணிப்புகள் 1941இல் தடைப்பட்டமைக்கு இரண்டாம் உலக மகாயுத்த நெருக்கடி காரணமாக அமைந்தது. எனினும் இக் கணிப்பீடு 1946 இல் இடம்பெற்றது. 1951இல் இடம்பெறவேண்டிய கணிப்பு 1953இல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1963இல் அடுத்த கணிப்பு இடம்பெற்றது. இதன்பின் இலங்கை தமது வழக்கமான கணிப்பாண்டிற்கு 1971 இல் திரும்பியது. 1991, 2001 இல் இடம்பெற வேண்டிய முழு நாட்டிற்குமான குடித்தொகைக் கணிப்பு வன்னிப் பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை. 2012 ஆம் ஆண்டு தேசியக் குடித்தொகைக் கணிப்பீடு மோற்கொள்வதற்கான ஆரம்பப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1981 முதல் மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் உள்ளுர் குடிநகர்வுகள், வெளியூர் குடிநகர்வுகள், வெளிநாட்டு குடிப்பெயர்வுகள் என இடம்பெற்று வந்துள்ளன. இவை எவையும் கால ரீதியான முறையான கணிப்பீடுகளுக்குள் வரவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்னியின் இறுதி யுத்தத்தின் போது வன்னியின் மொத்தக் குடித்தொகையும் அகதிகளாக வெளியேறி வவுனியா முகாம்களில் முடக்கப்பட்ட நிலை தோன்றிற்று. உலக வரலாற்றில் குறுங்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முழுமையாக குடித்தொகை வெளியேற்றப்பட்ட நிகழ்வு இங்கேயே இடம்பெற்றுள்ளதெனலாம். அம் மக்கள் இப்பொழுது தான் மீளவும் குடியேறி வருகின்றனர். மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. 2012ல் பெறப்படவுள்ள உத்தியோகபூர்வ குடித்தொகை கணிப்பீட்டின் ஊடாகவே இவைபற்றி முறையாக ஆராயமுடியும். அதுவரை 1981 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடுகளையே உத்தியோக ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டுமாகையால் அவ் ஆண்டுவரையான தரவுகள் ஊடாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.



அட்டவணை: வன்னிப் பிரதேசத்தினதும் இலங்கையினதும் குடித்தொகை
வளர்ச்சி 1871 முதல் 1971 வரை


ஆண்டு வன்னிப் இலங்கை
பிரதேசம்

1871 - 2400380
(மார்ச்)

1881 - 2759738
(பெப்ரவரி)

1891 46774 3007789
(பெப்ரவரி)

1901 48662 3565954
(மார்ச்)

1911 51012 4106350
(மார்ச்)

1921 525575 4498605
(மார்ச்)

1931 51591 5306971
(பெப்ரவரி;)

1946 63704 6657339
(மார்ச்)

1946 94731 8097895
(மார்ச்)

1953 163270 10582064
(ஜூலை)

1971 224735 12689899
(ஒக்டோபர்;)

1981 278800 14846800

ஆதாரம்:- குடிசன கணிப்பு, 1981

வன்னிப் பிரதேசத்திற்குரிய குடித்தொகை விபரங்களை 1871 தொடக்கம் 1981 வரை இலங்கைக் குடித்தொகைக் கணிப்பு அறிக்கைகளிலிருந்து பெற முடிகின்றது. 1871 முதல் 1981 வரையான வன்னிப் பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் இலங்கையின் மொத்தக் குடித்தொகை வளர்ச்சியும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணைத் தரவுகளின்படி வன்னிப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1891 இல் 46,774 ஆக இருந்து 1971இல் 2,24,735 ஆக அதிகரித்துள்ளதைக் காணலாம். இது 300 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 323 வீதமாக வளர்ச்சி கண்டது. குடித்தொகை மாற்றங்கள்
வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகை சில காலங்களில் குறைவாகவும் இன்றும் சில காலங்களில் அதிகமாகவும் வளர்ச்சி கண்டது. பொதுவாக 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவே இருந்தது. வன்னிப்பிரதேசத்தின் வருடச்சராசரி வளர்ச்சி வீதம் 1931 ஆம் ஆண்டுவரை 0.5 வீதத்திற்கு மேலாக அதிகரிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் சில குடிமதிப்பீட்டாண்டிடைக் காலங்களில் வன்னிப் பிரதேசம் முழுவதும் குடித்தொகை இழப்பு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இவ் இழப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. 1881 - 1901 இடையிலும் 1911 – 1921 இடையிலும் குடித்தொகை இழப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற குடித்தொகை இழப்புகளுக்கும், குடித்தொகையின் மெதுவான அதிகரிப்பிற்கும் மலேரியா, கலரா போன்ற தொற்று நோய்கள் இப்பகுதிகளில் அக்காலங்களில் பரவியமையே காரணமாகும். அக்காலங்களில் மருத்துவ, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றக்குறைவினால் சிசு மரண வீதம், பிரசவத்தாய்மார் மரணவீதம் என்பன அதிகமாக காணப்பட்டன. மேலும் அன்றைய மக்கள், கல்வியறிவுக் குறைவின் காரணமாகச் சுகாதாரமற்ற வாழ்வு வாழ்ந்தனர். ஆரோக்கிய வாழ்வை வழங்கக்கூடிய சுகாதார நிறுவனங்களும் குறைவாகவே காணப்பட்டன. இக்காரணங்களால் 1946 இன் முன்பு இறப்புவீதம் அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக 1906-1923 வரை தேசிய இறப்புவீதம் 1000 பேருக்கு 30 – 38 என்றவாறு உயர்ந்து காணப்பட்டது. 1946இல் இது 20 ஆகவும் 1947 இல்14 ஆகவும் வீழ்ச்சிகண்டது. 1946 இல் சிசு மரண வீதம் 1000 பிறப்புக்கு 141 ஆக இருந்தது. 1947 இல் 82 ஆக வீழ்ந்தது. பிரசவத்தாய்மார் மரணம் 1946 இல் 1000 பேருக்கு 16 ஆக இருந்தது. 1950 இல் 6 ஆக வீழ்ச்சி கண்டது. எனவே 1946 ஆம் ஆண்டு குடித்தொகை வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1946 – 1953 குடிமதிப்பிட்டாண்டிடைக் காலத்திலே 48.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது 7.0 வருடச் சராசரி வளர்ச்சி வீதமாகும். இவ்இடைக்காலத்திலே தேசிய வருடச்சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 3.1 ஆக மாத்திரமே காணப்பட்டது. 1946 – 1953 இடைப்பட்ட கால குடித்தொகை வளர்ச்சியானது வன்னிப் பிரதேசம் முழுவதும் சடுதியானதோர் அதிகரிப்பபைக் காட்டுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 78.3 வீத அதிகரிப்பும், வவுனியா மாவட்டத்தில் 51 வீதமான வளர்ச்சியும் மன்னார் மாவட்டத்தில் 39 வீத வளர்ச்சியும் 1946 – 1953 குடிமதிப்பீட்டாண்டைக் காலத்தே ஏற்பட்டது. 1931 1946 குடிமதிப்பீட்டாண்டைக் கால வளர்ச்சி ஓரளவு அதிகமாக காணப்படுவதற்கு பத்தாண்டுக்கொருமுறை எடுக்கப்படவேண்டிய குடிமதிப்பு இக்காலத்தே பதினைந்து வருட இடைவெளியில் எடுக்கப்பட்டதே காரணமாகும். 1946 இன் பின்னர் ஏற்பட்ட சடுதியான குடியதிகரிப்புக்கு பிறப்பு வீதம் நிலையாக இருக்க இறப்புவீதத்திலேற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இவ் இறப்பு வீத வீழ்ச்சிக்கு 1946 இல் மலேரியா நோய்த்தடைக்காக நாடு முழுமைக்கும் டி.டி.ரி மருந்து தெளிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே உடனடிக் காரணமாகும். இதனைத் தவிர நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்ட துரித அபிவிருத்தியும் காரணமாக அமைந்தது. இக்காலத்திலே கிராமங்கள் தோறும் சுகாhதாரவசதிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுப்புறச் சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால், மதிய உணவு விநயோகம் என்பன குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க துணைபுரிந்தன. பொதுவாக இலங்கை மக்களது ஆரோக்கியம் பேணப்பட்டதற்கு உணவு மானிய முறை இக்காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணமாகும். இம் முறையினால் மக்கள் அரிசியையும் ஏனைய உணவுப்பொருட்களையும் மலிவாகப் பெறமுடிந்தது. இதனால் மக்களது உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கவே ஆயுட்காலம் அதிகரித்ததோடு ஆரோக்கியமான வாழ்வால் இறப்பு வீதத்திலும் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இக் காலத்திலே இலவசக்கல்விமுறை அறிமுகத்தால் கல்வியறிவு வளர்ந்தமையும், தொற்றுநோய்த்தடை மருந்துகள் பழக்கத்திற்கு வந்தமையும் இறப்புவீத வீழ்ச்சிக்குரிய மேலும் சில காரணங்களாகும்.

வன்னிப் பிரதேசம் குடித்தொகை 1946 இன் பின்னர் வேகமாக அதிகரித்தமைக்கு இயற்கை அதிகரிப்பு மாத்திரம் காரணமன்று, பெருமளவு இடம்பெற்ற குடிநகர்வும் முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளில் வன்னிப் பிரதேசத்தில் பழைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாடு அதனைச் சேர்ந்த தீவுகள் என்பவற்றிலிருந்தும் ஏனைய அண்மைய பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேற்றத்திட்டங்களில் குடியேறினர். இதனாலும் குடித்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே வன்னிப்பிரதேசக் குடித்தொகையின் வளர்ச்சி 72.4 வீதமாக அதிகரித்திமைக்கு இதுவே முக்கிய காரணமாகும்.கிளிநொச்சி மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவு குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதிகளின் குடிவளர்ச்சி 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே முறையே 117.1 வீதமாகவும் 95.4 வீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது. 1963-1971 இடைப்பட்ட காலத்திலே குடியதிகரிப்பில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டுத்திட்டத்தால் இயற்கை அதிகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இக்காலத்திலே அதிகளவு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படாமையும் இதற்கான காரணங்களெனலாம். எனினும் இவ் இடைக்காலத்திலே தேசிய குடித்தொகையின் வருடச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2 ஆகக் காணப்பட, வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகையின் வருடச்சராசரி வளர்ச்சி 4.7 ஆகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குடியடர்த்தியும் பரம்பலும்

வன்னிப் பிரதேசத்தின் 1971 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக்குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகும். இலங்கையின் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியான 508 பேருடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் குடியடர்த்தியான 1513 பேருடனும் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். வன்னிப்பிரதேசத்தின் பெருமளவு பரப்பில் காடுகள் பரந்திருப்பதே இதற்குரிய முக்கிய காரணமாகும்.

குடித்தொகைத் தரவுகளின்படி 1891 முதல் 1946 வரையான ஜம்பத்தைந்தாண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 6 பேரே அதிகரித்திருந்தனர். 1946 முதல் 1971 வரையான இருபத்தைந்து ஆண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 55 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இயற்கையான குடியதிகரிப்பும், குடிநகர்வால் ஏற்பட்ட குடி அதிகரிப்பும் இவ் இடைக்காலத்தில் அதிகரித்தமையே காரணமாகும். 1946 இன் பின் வன்னிப் பிரதேசக்குடியடர்த்தி வேகமாக அதிகரித்துவரும் போக்கை காட்டுகின்றது. எனினும் 1971 இல் வன்னிப்பிரதேசத்தின் குடியடர்த்தி யாழ்ப்பாணக் குடாநாட்டுக் குடியடர்த்தியை விட இருபதுமடங்கு குறைவாகவும் இலங்கையின் குடியடர்த்தியைவிட 7 மடங்கு குறைவானதாகவும் உள்ளது இது 1963 இல் முறையே இருபத்தைந்து மடங்கு குறைவாகவும் எட்டு மடங்கு குறைவாகவும் காணப்பட்டது.

வன்னிப்பிரதேசத்தின் புவியியல் ரீதியான குடிப்பரம்பல், பொதுவாக தொட்டம் தொட்டமாகக் குடிச்செறிவு அமைந்திருப்பதையே காட்டுகின்றது. இவை பெரும்பாலும் குளங்களை அண்டிய குடியிருப்புகளாகவே அமைந்துள்ளன. மன்னார் தீவு, கட்டுக்கரை குளத்தையண்டிய பகுதிகள், வவுனியா நகரம், கிளிநொச்சி குடியேற்றத்திட்டப்பகுதிகள், முள்ளியவளைப்பகுதி, முல்லைத்தீவு நகரம், என்பனவே குறிப்பிடத்தக்ககுடிச்செறிவு கொண்ட பகுதிகளாகும். குடிச்செறிவு குறைந்த பகுதிகள் குளங்களற்ற பகுதிகளாகவும், காடுகள் அடர்ந்த பகுதிகளாகவும், பெருமளவு பயன்படுத்தப்படாத நிலத்தையடக்கிய பகுதிகளாகவும் காணப்படுகின்றன.


1981ஆம் ஆண்டு குடித்தொகைப் பண்புகள்

1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டின்படி இங்கு ஆய்வுக்குட்பட்ட வன்னிப் பிரதேசக் குடித்தொகை 2இ78இ800 ஆகும். இது இலங்கையின் மொத்தக் குடித்தொகையின் 1.8 வீதமாகவும், வடமாகாணக்குடித்தொகையின் 25.7 வீதமாகவும் உள்ளது. வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பாணக்குடாநாடு 12.8 வீதத்தை உள்ளடக்கியுள்ள போதிலும் இங்கேயே அதிகளவு குடித்தொகை காணப்படுகின்றது. இதற்கு மாறாக வன்னிப் பிரதேசம் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தை கொண்டிருந்த போதிலும் இங்கு குறைவான குடித்தொகையே உள்ளது. 1981 இல் வடமாகாணக்குடித்தொகையில் 74 வீதத்தினர் குடாநாட்டிலும் 26 வீதத்தினர் வன்னிப்பிரதேசத்திலும் காணப்பட்டனர். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பீட்டின் போது இத்தொகை முறையே 77 வீதமாகவும் 23 வீதமாகவும் காணப்பட்டது. 1901 முதல் 1953 வரை இடம்பெற்ற குடித்தொகை மதிப்புகளின் தரவுகளின்படிசராசரியாக 86 வீதத்தினர் குடாநாட்டிலும் 14 வீதத்தினர் வன்னிப் பிரதேசத்திலும் காணப்பட்டனர்.

கிராம, நகரக் குடித்தொகை

வன்னிப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய நகரக்குடித்தொகை 39427 ஆகவும், கிராமக் குடித்தொகை (பெருந்தோட்டம் உட்பட) 185308 ஆகவும் உள்ளது. இது முறையே 17.5 விதமும் 82.5 வீதமுமாகும். இலங்கையின் நகரக்குடித்தொகை வீதமான 22.4 உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது. இலங்கையில் மாநகரசபை, நகரசபை, என நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந் நிர்வாகப் பிரிவின் எல்லைக்குள் வாழ்பவர்கள் நகரவாசிகளெனக் கணிக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் 89 கிராமசேவகர் பிரிவுக்குட்படும் கிராமங்களும் நான்கு நகரங்களும் உள்ளன. இவற்றுள் வவுனியா நகரசபை அந்தஸ்தையும் ஏனைய மூன்றும் பட்டின சபை அந்தஸ்தையும் பெற்றுள்ளன. நான்கு நகரங்களுள் மன்னார், முல்லைத்தீவு என்பன கரையோரமாகவும் வவுனியா, கிளிநொச்சி என்பன நடுவேயும் அமைந்துள்ளன. வன்னிப் பிரதேசத்தின் மொத்த நகரக் குடித்தொகையில் 52 வீதத்தை வவுனியா மாவட்டம் அடக்கியுள்ளது. வவுனியா பட்டினம் தனியாக 40 வீத நகரக்குடித்தொகையைக் கொண்டுள்ளது. எஞ்சிய நகரத் தொகையில் மன்னார் மாவட்டம் 28 வீதத்தையும் கிளிநொச்சி மாவட்டம் 20 வீதத்தையும் அடக்கியுள்ளது.

குடித்தொகை கூட்டு (1981)

குடித்தொகைக் கட்டினுள் அடங்கும் வயதமைப்பு, ஆண் பெண் விகிதம், இனப்பிரிவு, மதப்பிரிவு, வேலைப்பகுப்பு என்பன பற்றிய ஆய்வுகள் சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

வயதமைப்பு

வன்னிப் பிரதேசக் குடித்தொகையில் வயதமைப்பை நோக்கும் போது இளம்வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின்படி இங்கு 42.5 வீதத்தினர் 14 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 52.7 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 15 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டோராவர். மகப்பேற்று வளம்மிக்க 15 – 44 வயதுப் பிரிவினர் 43 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டோர் 4.8 வீதத்தினராக உள்ளனர். 15 வயதிற்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குவர். தொழில்புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 90 பேர் தங்கி வாழ்கின்றார்கள். நாடு முழுவதற்குமான தரவின்படி 100 பேரில் தங்கிவாழ்வோர் 84 பேராகும். தங்கிவாழும் இப்பிரிவினர் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இலங்கையிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் குடித்தொகையில் 40-50 வீதத்தினர் 15 வயதிற்குக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ் வயதுப் பிரிவினர் 20 33 வீதத்தினராகவே உள்ளனர்.
இலங்கையிலன் குடித்தொகையில் இளம்வயதுப் பிரிவினர் அதிகம் காணப்படுவதினால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றிற்காக அரசுக்குப் பெருமளவு செலவினம் ஏற்படுகின்றது. இது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவமானதொரு காரணமாகவும் அமைகிறது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் குடித்தொகையில் 39.3 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். பொதுவாக வன்னிப் பிரதேசக் குடித்தொகையிலும் இவ் வீதம் தேசிய வீதத்திலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.

ஆண், பெண் விகிதம்

குடித்தொகையில் ஆண்,பெண் பாகுபாடு பற்றிய ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலுக்கு இவ்விபரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. ஆண், பெண் வயதமைப்பும், விகிதாசாரமும் குடித்தொகை வளர்ச்சிக்கான காரணத்தைத் தேடுவோர்க்கு முக்கியமானதாகும்.
வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில்(1981) 1,23,594 ஆண்களும் 1,01,141 பெண்களும் காணப்படுகின்றனர். இதிலிருந்து 22,453 ஆண்கள் பெண்களைவிடக் கூடதலாக இங்கு உள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதம் இங்கு அமைந்துள்ளது. இலங்கைக்குரிய அவ் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் என்றவாறு அமைகின்றது. எனவே தேசிய விகிதத்திலும் இங்கு அதிகமாக காணப்படுகின்றது.

குடித்தொகைத் தரவின்படி யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலேயே ஆண், பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை வவுனியா மாவட்டம் வகிக்கின்றது. இப்பகுதிகளில்; அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் அதிகளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமையே இதற்கு முக்கிய காரணமெனலாம். காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப்பகுதிகளில் பாதுகாப்பு உறுதியற்று இருப்பதாலும், கல்வி வசதி, சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி என்பன குறைவாக இருப்பதாலும் குடும்பத்தலைவன் தனது மனைவி பிள்ளைகளை பிறந்த ஊரில் விட்டு வருவதையே விரும்புகின்றான். இதுவே குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்கள் குடித்தெகை அதிகமாக இருப்பதற்குரிய முக்கிய காரணமாகும். குடியேற்றத்திட்டத்திற்கு மாத்திரமன்றி வர்த்தகம், போக்குவரத்துப் போன்ற தொழிற்றுறைக்காகவும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் ஆண்கள் குடிநகர்வு இங்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனைச் சேர்ந்த தீவுப்பகுதிகளிலுமிருந்தே அதிகளவு குடிநகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பு அறிக்கை தரும் பிறந்த இடம் பற்றிய தரவுகளிலிருந்து வவுனியா மாவட்ட குடித்தொகையில் 58 வீதத்தினரும் மன்னார் மாவட்டக் குடித்தெகையில் 71 வீதத்தினரும் அம் மாவட்டங்களுக்கு வெளியே பிறந்தவர்களாகவே உள்ளனர். எனவே வன்னிப் பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியில் குடிநகர்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகை ஆண் சார்பாக இருப்பதற்கு குடிநகர்வு மாத்திரம் காரணமன்று. பிறப்பில் ஆண்களின் பிறப்பு அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதும் மேலதிக காரணங்களெனத் தேசிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனம்

இலங்கை பல இன மக்கள் வாழும் நாடென்பதை வன்னிப்பிரதேசமும் பிரதிபலிக்கின்றது. எனினும் இங்கு சில இனத்தவர்களே செறிந்து வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும்
வித்தியாசமான வரலாற்று, சமூக மதப் பின்னனிகள் உண்டு. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டிலிருந்தே தற்பொழுது குறிக்கப்படும் இனப்பிரிவுகளின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. மொழி, மத புவியியற் பின்னணிகள் இனப்பாகுபாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
வன்னிப் பிரதேசம் அதிகளவில் தமிழர் வாழும் பகுதியாகும். தமிழர்களுக்கு வன்னி நிலத்துடன் ஒன்றிய நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளதால் இப்பிரதேசம் தமிழரது பாரம்பரியத் தாயகத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படுபகின்றது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 62.2 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்களாவர். இவ் வீதம் கிளிநொச்சி மாவட்டத்தில்; 79.8மூ ஆகவும் வவுனியா மாவட்டத்தில் 51மூ ஆகவும் உள்ளது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் இந்தியத் தமிழர் 16.1 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மலையகப்பெருந்தோட்டங்களுக்குக் கூலித்தொழிலாளர்களாகப் பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இவர்களாகும். இன்று பெருந்தோட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை இனப்பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்திற்குக் குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவர்கள் வாழ்கின்றனர். இலங்கை, இந்தியச் சோனகர் வன்னிப் பிரதேச மொத்தக்குடித்தொகையில் 12.5 வீதத்தினராவர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரிலும், அண்மைய பல கிராமங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மன்னார் மாவட்ட மொத்தக் குடித்தொகையில் இவர்களின் பங்கு 26.8 வீதமாகும். மன்னார் வர்த்தகத்துறைமுகமாக விளங்கிய காரணத்தால் இவர்களது குடியிருப்புகள் இங்கு அதிகம் ஏற்பட்டன.

வன்னிப்பிரதேசக் குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 90.9 வீதத்தினராவர். இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இலங்கைச்சோனகர், இந்தியச்சோனகர், ஆகியோர் தமிழ் மொழி பேசும் மக்களாகும்.வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவைத்தவிர ஏனைய பகுதிகளில் தமிழ்மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் மொத்தக் குடித்தொகையில் 9 வீதத்தினராகும். வவுனியா மாவட்டத்தில் மொத்தக்குடித்தொகையில் இவர்களது பங்கு 16.3 வீதமாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையில் 4.6 வீதத்தினர் சிங்கள மக்களாவர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இவர்களது பரம்பல் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுக்கந்தை. ஈரப்பெரியகுளம், உலுக்குளம், ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளாகும். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டை ஒப்பிட்டு நோக்கும் போது வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் சிங்களமக்களின் வீதம் அதிகரித்துள்ளதைக் காணலாம்.

மதம்

வன்னிப் பிரதேசம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக இருப்பதால் தமிழரது முக்கிய மதமான இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்துக்கள் 58.2 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில்; இந்துக்கள் 87.4 வீதத்தினராகவும், வவுனியா மாவட்டத்தில் 65.4 வீதத்தினராகவும் உள்ளனர். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுள் மன்னார் மாவட்டத்திலேயே இந்துமதத்தினர் குறைவாகக் (30 வீதம்) காணப்படுகின்றனர். மன்னார் சர்வதேச வர்த்தகத்துறையாக விளங்கியதும், போர்த்துக்கேயரது கெல்வாக்கின்கீழ் இது நீண்ட காலமாக இருந்து வந்ததும் இங்கு முஸ்லீம், றோமன்கத்தோலிக்க மதங்கள் அதிகளவு பரவ ஏதுவாயிற்று.

மன்னார் மாவட்டத்தின் மொத்தக்குடித்தொகையில் 37.8 வீதத்தினர் றோமன்கத்தோலிக்கர்களாகக் காணப்படுவதற்கு போர்த்துக்கேயரது செல்வாக்கே காரணமாகும். இவர்கள் மன்னார் தீவுப்பகுதி, முசலிப்பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் மொத்தக் குடித்தொகையில் றோமன்கத்தோலிக்கரும், ஏனைய கிறீஸ்தவர்களும் 20.6 வீதத்தினராக உள்ளனர். வவுனியாவின் மொத்தக் குடித்தொகையில் 12 வீதத்தினராக றோமன்கத்தோலிக்கர் உள்ளனர்.

இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இந்திய, இலங்கைச்சோனகர்களும் மலாயர்களும் முஸ்லீம்களென அழைக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இவர்கள் 13.2 வீதத்தினராவர். முஸ்லீம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் கொள்ளப்படுகின்றது. ஒரு மதப்பிரிவினர் தனிப்பெரும்பான்மையினராக இல்லாதமை இப் பிரதேசத்தில் முக்கிய பண்பாகும்.

சிங்களம் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 7.9 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் வவுனியா மாவட்டமே அதிகளவு (14.8 வீதம்)பௌத்தர்களைக் கொண்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவே பௌத்த மதத்தினரை அதிகளவிற் கொண்ட பகுதியாகும். வன்னிப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இவர்கள் ஓரளவு செறிந்துள்ளனர். ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே பரந்து காணப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு

வன்னிப் பிரதேச மொத்தக் குடித்தொகையில் 32.1 விதத்தினரே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்பு பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93.3 வீதமாகவும் பெண்களின் பங்கு 6.7 வீதமாகவும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் 65 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டவர்களாகவும் 35 வீதத்தினர் விவசாயமல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் முக்கிய தொழிற்றுறை விவசாயமாக இருந்த பொழுதிலும் மொத்தக்குடித்தொகையில் 20.2 வீதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் ஆண்களின் பங்கு 94 வீதமாக உள்ளது. ஆண் உழைப்பாளர்களில் தங்கிவாழ்வோர் தொகை அதிகமாக இருப்பதை இவை உணர்த்துகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆகியோர் உழைப்பவர்களில் தங்கிவாழ்வோராகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் 45 வீதத்தினராகக் காணப்படும் பெண்கள் வீட்டு வேலைகளுடனும் பகுதி நேர வேலைகளுடனும் திருப்தியடைவதால் குறைந்தளவே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மொத்தப் பெண் குடித்தொகையில் 4.6 வீதத்தினரே தொழில்வாய்ப்பை பெற்றவர்களாவர். இதில் 57.3 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்க 42.7 வீதமானோர் விவசாயமல்லாத தொழில்களில் அமர்ந்துள்ளனர்.

முடிவுரை

வன்னிப் பிரதேசக் குடித்தொகைக் கணிப்புகள் உத்தியோக பூர்வமாக 1981 இன் பின்னர் இடம்பெறவில்லை. வன்னியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்த சூழ்நிலைகளே இதற்கான காரணமாகும். இலங்கை அரசு இப் பிரதேசத்தில் தனது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்திருந்தது. மக்களிற்கான வாழ்வாதார விடயங்களைக் கவனிப்பதற்கான சில கணிப்பீடுகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக உணவு விநியோகம், மருத்துவ சேவை போன்றவற்றை மேற்கொள்ள சில கணிப்பீடுகளை செய்து வந்துள்ளது. தேசிய மட்டத்தில் 1991, 2001 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்புகளில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உத்தேச மதிப்பீடுகள் பெறப்பட்டு நிர்வாகத் தேவைக்காககப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009 மே மாதம் வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்டனர். 2009 மே 18 இன் பின் இவர்கள் அனைவரும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் இடம்பெயர்ந்த அகதிகளாக தங்கவைக்கப்பட்டனர். அகதி முகாம்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி அங்கு 3,17,000 மக்கள் பதிவு செய்யப்பட்டனர்.

வன்னியின் உக்கிர யுத்தம் நடந்த காலமாகிய 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு 4,29,059 மக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சி முல்லைத்தீவு அரசஅதிபர்களும், ஜ.நா நிறுவனத்தின் அறிக்கைகளும் குறிப்பிட்டதோடு இக் கணிப்பீடுகளையே மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்தினர்.

வன்னி யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகியும் மீள் குடியேற்றம் முறையாக இடம்பெறவில்லை. பெருந்தொகையான மக்களது வீடுகள், பயன்தரு மரங்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் மீள் குடியேற்றம் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது. மீள் குடியேற்றம் முறையாக இடம்பெற்று முற்றுப் பெற்ற பின்னரே 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய குடித்தொகைக் கணிப்பீடுகள் இடம்பெற வேண்டும். இக் கணிப்பீடுகளில் இருந்தே வன்னிக் குடித்தொகையில் 1981 ஆம் ஆண்டின் பின் 30 வருட காலம் நிகழ்ந்த பாரிய மாற்றங்கள், குறிப்பாக குடிமனை அழிவுகள்,இறப்புக்களின் தொகை, ஊனமுற்றோர் தொகை, விதவைகளின் தொகை காணாமல்போனோர் தொகை போன்ற அம்சங்கள் தெரியவரும் என குடிப்புள்ளிவிபரவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

Thursday, February 4, 2010

எமக்கு பொருத்தமான விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கம்

விவசாயத் தொழிற்துறை எனும்போது அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்குத் தேவையான (உள்ளீடுகள் வாகனப் போக்குவரத்து சேவை.களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையம் மறுபக்கத்தில் விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களை;Aம் குறிக்கும். இங்கு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில் பற்றியே நோக்கப்படுகிறது.

எமது> கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்ட கால பாரம்பாpயமிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாயக் தொழிற்துறை நோக்கிய விhpவாக்கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தி;Aறவில்லை. அதாவது, விவசாய வளமானது அதிக வருமானம் தரத்தக்க உற்பத்தியை மூலவளமாகக் கொண்ட விவசாய கைத்தொழில் துறைநோக்கி இன்றுவரை சாpயாகத் திசைதிருப்பப்படவில்லை என்பதே இதன் பொருளாகும். இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளா;ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட்டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற்குக்கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது தொpந்ததே.

எமது பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பாpய வகை ஆலை, ஒரளவு நவீனவகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பாpய ஆலைகளே. நெல்லை அhpசியாக மாற்றும் ஒரு சிறு பதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பாpய ஆலைகள்;; அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

அவையாவன:

அரைக்கப்படும்போது அhpசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது> அhpசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன> தவிடு சாpயாக நீக்கப்படுவதில்லை> புழுங்கல் அhpசியை மட்டுமே இவ்வகை ஆலைககளில் அரைக்க முடிகின்றது. ஆலையை இயக்கும் வலுநுகா;வில் சிக்கனம் இல்லாதுள்ளது. எனவே பாரம்பாpய ஆலைகளை நவீனமாக ஆலைகளை மாற்றுதல் வேண்டும்.

வடகீழ் மாகாணத்தில் நெல் 258இ 933 கெக்கடா; பரப்பில் விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல்விளை பரப்பில் 35 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 65 வீதம் கிழக்கு மாகணம் 35 வீதம் வடமாகாணம்) இதனால் நெல்வரைக்கும் ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.

அhpசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு “நெசில்ஸ்” உற்பத்திகளாக வரும் நெஸ்டம் (நேளவரஅ) பாலின் (குழசடiநெ) ஆகிய குழந்தை உணவூப் பொருட்களே தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். மேற்படி உணவுப்பொருட்களில் 400 கிராம் பொதியில் இருகைப்பிடியளவான அhpசியோ> கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட்டச்சத்துகள் சோ;க்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதனைப் பொறுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியூள்ளது. இவ் அதிக விலையை அப்பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு சில செயல்முறைக்குட்படுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவகே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளைக் கைத்தொழில் மயப்படுத்தும் போது நாம் அதிக வருமானம் பெற முடி;Aம்.

தெங்குத்தொழில் ஓப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல்இ தேங்காய் எண்ணெய்இ சவா;க்காரம்> மாஜாpன்>வினாகிhp போன்ற உற்பத்திகளும் தும்புத் தொழில் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஒரளவு அபிவிருத்தியை எய்தியூள்ளன. ஆனால் வடக்குஇகிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும் படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத் தொழில் அபிவிருத்திக்கான நிறைய வாய்ப்புகள் இங்குள. தெங்குத் தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம் பெறுவதால் அதிகபயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராமமட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடி;Aம். கெங்கினைத் தொழில் மயப்படுத்துதோடு அதனை நவீன முறைக்கைத்தொழில் உற்பத்திகளாகவோ> குடிசைக்கைத்தொழில் உற்பத்திகளாகவோ மாற்றுதல் அவசியம்.

இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோh; முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்துறை சீனி உற்பத்தியாகும். கரும்பு> சில கிழங்கு வகைகள்இ பனை ஆகிய வளங்களிலிருந்து பனை வளம் செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் தற்போது கந்தளாய்> கல்லோயாவில் கரும்புச்சீனி உற்பத்தியாகின்றது. தேசிய மட்டத்தில் வருடம் 3இ000 000 தொன் சீனி நுகரப்படுகின்றது. ஆனால் 45>000 தொன் தான் உள்நாட்டில் உற்பத்தியாகின்றது. வறண்டவலயத்தில் கரும்புச் செய்கையினை நல்ல முறையில் மேற்கொள்ளலாம். பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிhpடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்குவகைகள் எவையென ஆராய்ந்தறிந்து அவற்றினைப் பயிhpட்டு சீனி உற்பத்தியை அதிகாpக்க முடியூம். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பாpய வளமான பனைவளத்தை சீனி உற்பத்திக்குப் பயன்படுத்துவோமாயின் அதிக வருமனமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமெனக் கருதுகின்றனா;. பனஞ் சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது முக்கியமாக எhpபொருள் செலவே அதிகமாக உள்ளது. சூhpய சகதியைப் பயன்படுத்துவதன் மூலம் இச்செலலைக்குறைக்க முடியூமாயின் உற்பத்திச் செலவைக் குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியூடன் இணையாக மதுபான உற்பத்தியையூம் அதிகாpக்கலாம். இவை ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் தரம் வாய்ந்தனவாக அமைதல் வேண்டும். பனைவள அபிவிருத்திச் சபை> சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக் காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனா;. பனைவளத்திலிருந்து பலவகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உல்லாசப்பயணத் தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை எமது பிரதேசத்தில் அதிகளவூ அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோH தொழிற்துறை விலங்கு வேளாண்iமையாகும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நல்லமுறையில் கிட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்வளாத்;து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாகஇ இறைச்சியாக பெறுவதில் அதிக வருமானம் உண்டு. தினைவகைகளைக் கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக இறைச்சியாக நுகா;வதில் அதிக பயன் உண்டு. புல்லும் தினைவகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடுஇ எருமைஇ பன்றி> முயல் இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விhpவாக்கம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மந்தை வளா;ப்பில் அவா; தனது வீட்டுத் தேவைக்கான உயிh;வாயூவை (டீழைபயள) உற்பத்தி செய்யலாம் பயிh;களுக்கு உரம் பெறலாம் பால்> இறைச்சி பெறலாம் இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியூறத்தக்கவகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத் திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன் பெறமுடியூம். இதற்கு சிறந்த உதாரணம் மன்னாhpல் அமைந்துள்ள “ஸ்கந்தபாம்’ ஆகும். தனி நபா; ஒருவாpன் மேற்படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்டவல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவூம் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராம மட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு> சிறு கோழிப் பண்ணைஇ ஆடு என்பன வளா;க்க ஊக்கம் அளிக்கப்படுதல் வேண்டும். எமது கிராமங்களிலுள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து இலை>குழை தரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட;டி அதன் மூலம் விலங்கு வேளாண்மை அதிகாpக்கச் செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதரா வளமுள்ள கிராமக் குடுப்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பொpதும் உதவும்.பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்துறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனை புட்டிப்பால்> பால்மா பட்டா;. சீஸ்>ஐஸ்கிறீம்>யோக்ஹட் போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்க வல்ல உற்பத்திகளாகும். புல்வளா;ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத்தொழிற்றுறையின் விhpவாக்கமானது சந்தையின் விhpவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளா;ச்சி பெறத் தக்கவையாகும். யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள பாற்பண்ணை தற்போது நவீன முறைப்படுத்தப்பட்டு உற்பத்தியை முன்னெடுத்து வருவது போற்றத்தக்க முயற்சியாகும்.

வடகீழ் மாகாணத்திவே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும்>அப்பிரதேச>மொத்தக் குடித்தொகையில் 30 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக் குடா நாட்டுப்பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளா;ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்த முறைப் பயிh;ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோh; நவீன விவசாயிகள் என கூறத்தக்கவா;கள். யாழ்ப்பாணக்குடா நாட்டு விவசாயிகள் போல நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களைப் பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதாpது. பாரம்பாpய முறையை உடனடியாகவிட்டு நவீன முறையைப் பின்பற்றக்கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவினத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.

யாழ்ப்பாணக்குடா நாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை>மிளகாய்>பழங்கள்> தினைவகைள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவூ உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ்;குடாநாட்டு விவாசயிகளே உற்பத்தி செய்கின்றனா;. எடுத்துக்காட்டாகஇ இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும்இ மிளாகய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ்குடாநாட்டிற்குள் இரு தசாப்தங்களுக்கு முன்னா; அடங்கி இருந்தது. அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விhpவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடுதல இம்மண்ணை நேசிக்கும் அனைவாpனதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விhpவாக்கத்துடன் மாத்திரம் நின்று விடாது> அதனை நவீன முறையிலே சிகரட் உற்பத்தியாக மாற்ற முடிAம்> இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து> சிகரட் புகையிலை உற்பத்தியைAம் ஊக்குவித்து விவசாயத் தொழிற்றுறை விhpவாக்கம் செய்யப்படலாம்.

இப்பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடா நாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றுள் முக்கியமாக பழq;கள் பதனிடல்> தகரத்திலடைதல> காய்கறி பதனிடல் என்பவற்றின் விhpவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களிலேயே சில பழங்களும்இ காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் நிரம்பலை அதிகமாக உள்ளன. அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள்>காய்கறிகள் பெருமளவவு பழுதடையூம் நிலையூம் தோன்றுகின்றது. எனவே பழங்களைAம் காய்கறிகளையூம் பாதுகாப்பாக வைப்பதற்கும்> நீண்ட நாட்களுக்கு இன்னோh; வழியில் காப்புச் செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில் நுட்ப உத்திகள் பயன்படுத்தலாம். அவற்றுள் சில பின்வருமாறு

1. பாதுகாப்பாக நீண்ட காலம் வைத்திருக்கக் கூடிய பாhpய களஞ்சியங்களை உருவாக்குதல்.


(மெழுகு ப+சுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளி;த்தல்)


2. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்பு செய்வது: (உ-ம் பழங்களை: பழச்சாறு> பழக்கூழ் வடிவிலோ> பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)


3. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல் (ஊறுகாய்)


4. உலா;த்துவதன் மூலம் பாதுகாத்தல். (வற்றல் போடுதல்)

மேற்படி பாதுகாப்பு முறைத் தொழில் நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளா;ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப பின்பற்றி எமது பிரதேசத்திற்கு பொருத்தமான தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவூ பதனிடல் தொழிற்றுறையை விhpவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப் பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம்பழம்>பலாப்பழம்>தக்காளி> பப்பாசி> எலுமிச்சை> தோடை விளாம்பழம்> வாழைப்பழம்> அன்னாசி பனம்பழம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் இலாபகரமான தென்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவவொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியூம் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும். பாதுகாத்துப் பயன்படுத்துவது இலாபம் தரத்தக்கதுதான் என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற் கொள்ளபபட வேண்டும். பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொழற்றுறை உற்பத்திகளில் பானங்கள்> தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்இ நெக்டா; போன்றன உடனடியாக பருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாக் கொண்டவற்றில் ஐhம்>nஐலி> சட்னி> பழக் குழம்பு என்பனவூம் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள்> ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராங்களிலே சில பருவங்களின் போது பழங்கள்இ காய்கறிகள் பெருமளவு உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப் பருவகால உற்பத்திகளில் பெரும்பங்கினை வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவூள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்குஇ பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான மலிவான பாதுபாப்பு தொழிலநுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இகற்கான பல ஆய்வூகளும் செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்கு மெனலாம். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விவசாயஇ கால்நடை உற்பத்தியின் கண்காட்சியில் எமது விவசாயத்iயின் விhpவாக்கம் ஒளிமயமாக காண்பிக்கப்பட்டமை இம் மண்ணை நேசிப்போருக்கு மகிழ்ச்சியை தந்த விடயமாக அமைந்துள்ளது. பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகாpக்கும் அதே நேரத்தில்> அவ் உற்பத்திகளை அதிக வருமாணம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுதற்கு விவசாயத் தொழிற்றுறை விhpவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவா;களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியூறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குய வழிமுறை சுருக்கமான தந்திரோபாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயல்முறைக்குட்படுத்தி வேறௌh; உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல் அவ் உற்பத்திகளை இன்னும் சில செயல் முறைக்குட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விலசாயத் தொழிற்றுறை விhpவாக்கததின் வளா;ச்சி படிகள் ஆகும். இதன் விளைவாக அதிக வருமானம்-இலாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகாpக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையிலான நாடுகள் விருத்திAற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறைAம் ஆh;வமும் காட்டவேண்டும்.

Tuesday, January 26, 2010

யாழ்.குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம்




தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட் டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின் றது. வடமாகாணத்தின் மொத்த குடித்தொகை யில் 70 வீதத்தினர் யாழ். குடாநாட்டில் செறிந்தி ருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய் கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத் தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசீன்காலச் சுண்ணாம்புப் பாறையமைப்பைக் கொண்டுள் ளன. இப்படிவுகள் தரைக்கீழ்நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை யாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புக விடும் இயல்பை அதிகளவு கொண்ட வையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப் படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீ“ர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப்பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல் கின்றது. ஆகக்கூடிய தடிப்பு "100110' வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர்நீர் ஏரிகளி னால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர் நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.


சுண்ணக்கற் பாறைப்படிவுகள் பிரதான நிலப் பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழ மற்று மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட் டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படு கின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செல வில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பண்படுத்த முடி யும்.


கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயேயாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன

யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வர லாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிண றுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்ப தற்காகவும் விவசாயத்திற்காகவும் மக்கள் பயன் படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப் பாக துலா மூலமும், உள்ளூர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப் பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந் துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை இன்றைய காலகட்டங்களில் உபஉணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச் செய்கை முறை யாக மாறிய பின்னர் நீர் நிறைக்கும் இயந்திரத் தின் பாவனை யாழ்.குடா நாட்டின் சகல கிரா மங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.


இவற்றினால் அண்மைக் காலங்களில் குடா நாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ் நீர் உவர் நீராதல் போன்ற பிரச்சினைகள் தோன்றியுள் ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்ப தில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்ல முறை யில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடா நாட்டில் தரைக் கீழ் நீர்வளம், பாவனை, முகாமைத் துவம், அபிவிருத்தி பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வள சபை வடபகுதி தரைக் கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதி லும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப் படவில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் வளம் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறை கள் பற்றியும் முன்னெப்போதுமில்லாதவாறு இன்றைய கால கட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண் டியவர்களாகவுள்ளோம். திட் டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங் கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத் திற்கு முன்வைக்கப் படுகிறது.


சில அபிவிருத்தி ஆலோசனைகள்


யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசன மும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம் சமே முன்னுரிமை பெறுகின்றது.


* யாழ்ப்பாணக் குடாநாட்டில் இனி மேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை, முக்கி யமாக விளை பரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது "உள்ளதையும் கெடுக்கும்' ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற் போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறை யிலானதாக மாற்றுவதோடு நீர்ப் பாசன முறைகளிலும் நவீனத் துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்து வத்துவத்தைப் பேணி வீண் விரயமாதலைத் தடுத்து உள்ள விவசாயப் பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்க தாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.


*யாழ்ப்பாணக் குடா நாட்டின் நிலப்பயன் பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்ற தாக மாற்றப்பட வேண் டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்சப் பயன் தரத் தக்கதாக அமைக்கப்படுதல் வேண் டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந் ததாக அமையப் பெறவேண்டும். யாழ்ப் பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர் செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வரு மானம் தரத்தக்க பணப்ப யிர்ச்செய்கைவிருத்தி செய்யப் பட வேண்டும். உபஉணவு, காய் கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப்பயிர்ச் செய்கை போன்றவனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சிலவிவசாய இந்த கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப் பொருள் களை வழங்குபவையாயும் இருக்க வேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகை யிலை செய்கை ஊக்குவிக்கப்படுதல் வேண் டும். ஏனெனில் இது செய்கையாள ருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர்வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்கும் உதவுவதாகும். தேயிலை, றப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச் செலாவணி பெறுவது போல் நாம் புகையிலையால் அந்நியச்செலா வணி பெறலாம்.


* நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதி களில் விவசாயச்செய்கை. நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்ய்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண் டும். சந்தை நிலைமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவ சாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ் வகை யான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதா கும்.


மழை நீரைத் தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்


* யாழ்ப்பாணக் குடாநாட்டு தரைக்கீழ் நீரின், மீள் நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும், என்பதில் பலர் ஒருமித்த கருத் தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத் திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பி யான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரானது மேற் பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்ப தற்கு சகல வழிகளிலும் நாம் முய லுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட் டின் சுண்ணக்கற் புவி அமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங் களில் நிறையும் தண்ணீ ரில் பெரும் பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிக ரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின் றன. இவ்வாறான குளங்களைத் துப்பரவு செய் தலும் தூர் அகற்றுதலும் அவ சியம். இங்கு இவ்வாறான முயற்சிகள் அரிதாகவே இடம் பெறுகின்றன.


*தோட்டங்கள் இளக்குவதற்கு குளங்க ளின் மண், மக்கி எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இது மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித் தெரியக் கூடியள விற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளி யேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.


*யாழ்ப்பாணக்குடாநாட்டில் சில பகுதிக ளில் , சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ்நீர் ஓடும் குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலா வரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன் னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிம லைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கர வெட்டி குளக்கிணறு, ஊறணிக் கிணறுகள், யமுனாஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப்பள்ளங் களாகும். இவற்றுள் சில பாசனத்திற்காக பயன்டுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத் தக்க வாய்ப்புகளை கொண்டுள்ளன.


நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஆய் வொன்றின் படி நாள் ஒன்றிற்கு 10 மணித்தியா லங்களில் 30,000 40,000 கலன் நீர்தோட்ட பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து எடுக்கக் கூடிய தன்மை தெரியவந்தது. இவற்றை பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங் களில் பெருமளவு நீரைத்திட் டமிட்ட அடிப்ப டையில் தரைக் கீழ் நீர் மீள்நிரப் பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர் வளத்ததைப் பெரி தும் அதிகரிக்கக் கூடியதாக அமையும் என துணி யலாம்.


* தரைக்கீழ் நீர்க் குகைவழிகள் மூலம் நீர் கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப் படுகின்றது. கீரிமலைக்கேணிக் குகை ஊடாக வரும் நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்க வேண் டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனை கள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல் முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.


நன்னீர் ஏரித்திட்டம்


* யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ் வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங் குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற் றும் திட்டம் பற்றிச் சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப் பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிக ரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக் கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைகீழ் நீர்வில்லைகள் துண்டுபடாது தொட ராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சினைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளைநிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப் பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகளை நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்கு மெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922 இல் இரணைமடுக்குள அணை கட்டப்பட்ட போது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக் கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங் கொள்ளத்தக்கது.


யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்ட கால திட் டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற் றப் படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறை யிலுள்ள 33 உவர்நீர்த் தடுப்புத் திட்டங்களும் உள் ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீ ரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரி களாக மாற்றலாம். அவையாவன.


1. ஆனையிறவு மேற்கு கடனீரேரி
2. ஆனையிறவு கிழக்கு கடனீரேரி
3. உப்பாறு/ தொண்டைமானாறு கடனீரேரி


மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு, அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டு முள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடனீரை உள்ளே வரவிடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்லமுறையில் செயற்படுத் துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடா நாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரி களையும் அதிக பொருள்செலவு இன்றி நன்னீ ரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரண மாக மண்டைதீவையும் வேலணையை யும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரே ரியாக மாற்றலாம். பண்ணைத் தாம்போதி யையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ். நகரத்தின் தென்மேற்கு பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப் பரப்புக ளில் உவர்த்தன்மை நீக் கப்பட்டு அவற்றை வளமான விளை நிலங்காளக மாற்ற முடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமை யுமெனலாம்.


கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக் கின்றனர்.


1. சூழல் மாசடைதல் தொடர்பானது


கடல் நீரேரிகளில் நீர்வரத்துத் தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியி ருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற் றினால் (சோளகக் காற்று) புழுதி வாரி வீசப்படு மென்றும், இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் அபாயத்தைக் கொண்டுள் ளதெனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.


இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்க லாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப் பதன் மூலமாகவும் முற்றாக நீர் வற்றும் பகுதிக ளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்ட மிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமா கவும் இம் மாசடைதல் பிரச் சினையைச் சமாளிக் கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப் பிற்கு உட் படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக் குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.


2. கடல் நீரேரிகளில் மீன் பிடித்தொழில் மேற் கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து


* இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப் பகுதிகளில் குடியிருப்புக் களை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடி யதே. குடாநாட்டுப் பரவை கடற் பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்குக் கரையோ ரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக் குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண் டகால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.


பயிர்களுக்கு மித மிஞ்சிய நீர் பாய்ச்சல்


* யாழ்ப்பாணப் பகுதிகளில் நீரிறைப்பு, இயந் திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பணிர்க ளுக்கு மித மிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாகக் கருதப்படுகின்றது. உவர் நீராதல் பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத் திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசா யிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண் டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனை தடுப் பதற்கு இஸ் ரேல் நாட்டில் காணப்படும் பாசன முகாமை களான விசி றல் பாசன முறைமை,பல குழாய் வழி இணைப்பு க்கள்


மூலம் பயிருக்கு அடியில்நீரைச் செலுத் துதல், ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பைத் தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒரு துளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறை களை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.


* நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்ட மிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண் ணியல், பொறியியல், விவசாய அறிவியல் போன்ற துறைசார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். யாழ்ப் பாணப் பிரதேசத்தை நீர்வள வலயங்களாக முதலில் வகுத்தல் வேண்டும். மழைநீர் ஓடை கள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவ தானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் அள வுகள், உவர்த்தன்மை, நீரின் கடினத்தன்மை, உரம் கிருமிநாசனிப் பாவனைகளால் நீர் மாசு படும் தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல் போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர்வள வலயங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவு களின் துணையுடனேயே அபிவிருத்தித் திட் டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படை கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங் கள் வெற்றி பெறுமென நம்பலாம்.


*யாழ்ப்பாணப் பிரதேச நீர்வள அபிவிருத் தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத் தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட் டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போதுதான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசன அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற் பத்தியில் நாம் தன்னி றைவு பெறுவது மாத்திரமின்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும். *


பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
தலைவர், சமூகவியற்றுறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
(இணைப்பாளர், புறநிலைப் படிப்புகள் அலகு).