Thursday, March 18, 2010

அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும்

அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் இரா.சிவசந்திரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பு வேட்பாளராக நிற்கின்ற பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தமது கட்சி அலுவலகத்தில் 14.03.2010 அன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தபோது பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தினார்
இன்றைய அரசியலில் திட்டமிட்டே பெருந்தொகையான கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சிங்கள அரசு களமிறங்கியுள்ளது.
கல்வியறிவில் உயர்நிலையிலுள்ள யாழ் சமூகத்தை கேலிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட வேண்டும். கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர் ‘சென்றுவா வென்றுவா’ என ஆசீர்வதித்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு எமது மக்களின் வீடுகளை வாடகைக்கு எடுத்து வீடுகளில் நின்று ஒரு குழப்பமான தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சமீப காலத்தில் சுற்றுலா எனக்கூறி வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் அல்லோலகல்லோலப் படுவதை நீங்கள் அறிவீர்கள். மூன்று பெரிய தனியார் விடுதிகளான சுபாஸ்விடுதிஞானம்ஸ்விடுதிஅசோக்விடுதிகளை உயர்பாதுகாப்புவலயத்தினுள் அடக்கி இராணுவம் பொலிஸ் என்பவற்றை நிலைகொள்ளவைத்துவிட்டு சுற்றுலாத்துறையை வளர்க்கிறோம் என்று கூறுவது புத்திசாலியான உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். கலக்கிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சி போன்று யாழ்ப்பாணத்தைத் திரும்பிப் பார்க்காத பலரும் கூலிப்பட்டாளம் போன்று தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது உங்களுக்கு அவமானமாகத் தோன்றவில்லையா? இந்த நிகழ்வொன்றே இங்கிருப்போரை முட்டாளாக்கும் நடவடிக்கையென புரிந்துகொள்ளப் போதுமானது. இதற்கு நீங்கள் தகுந்த பாடத்தினைப் புகட்ட வேண்டும். இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை போர் என்ற கொடிய செயலால் சிங்கள அரசாங்கமும் சர்வதேசமும் கூட்டுச் சதியிட்டு மக்களை இடம்பெயர வைத்த நடவடிக்கை ஆகும். உள்@ர் இடம்பெயர்வு என்ற வார்த்தையை சிங்கள அரசே ஏற்படுத்தியது. அதேபோல் சர்வதேச புலம்பெயர்வாளர் எனும் வர்க்கத்தினரையும் இவர்களே ஏற்படுத்தினர். இவை பாரம்பரியமான எமது தமிழ் பிரதேசங்களிலேயே நிகழ்கின்றன. ஏனைய இடங்களில் நிகழ்வதில்லை. தமிழ்முஸ்லிம் மக்களே இதில் பாதிக்கப்படுகின்றனர். ஒருத்தரின் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதன் மூலம் அவனின் ஒட்டுமொத்த வாழ்வினையும் சிதைக்க முடியும். இதனைத்தான் பல இனவாத சிந்தனை கொண்ட திடட்மிடலாளர்களைக் கொண்டு அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது. வன்னியில் 3 1/2 இலட்சம் மக்கள் பலாத்காரமாக பிடுங்கியெறியப்படுள்ளனர். அவர்களை மீட்டெடுப்பது என்பது சாதாரண விடயமல்ல. 2000 வருடங்களுக்கு மேலான வாழ்க்கைத் தொடர்ச்சியைக் கொண்ட வன்னி நிலப்பரப்பை ஒரு சில மாதங்களில் மீட்டெடுப்போம் என்று சொல்லும் அரசின் கபடத்தனத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இவற்றினை மாற்றி எமது பொருளாதாரத்தை நாமே அபிவிருத்தி செய்யவும் எமது அரசியலை நாமே செய்யவும் எமது கலாசார பண்பாடுகளை நாமே பேணும் வழிகளை காண்பதற்காகவுமே நீண்டகாலமாக விலைபோகாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தமிழரசுக்கட்சியில் போட்டியிடுகின்றேன். அரசியல் என்பது சாக்கடையல்ல. அது புனிதமாக்கப்படவேண்டும் அதற்கு ஆய்வுஅறிவுதெளிவுஅஞ்சாமை எதனையும் ஆதாரத்துடன் எடுத்துரைக்கும் வல்லமை என்பன வேண்டும். இவை எனக்கு இருப்பதாகக் கருதினால் நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

என மாணவர்களிடையே உரையாற்றும்போது பேராசிரியர் குறிப்பிட்டார். மாணவர்களும் பேராசிரியர் அவர்களின் அரசியல் பிரவேசம் தமிழ் மக்களுக்கு அவசியமான ஒன்று எனவும் தங்கள் பணியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தங்களுடைய முழுமையான ஆதரவை வெளிப்படுத்துவோம் எனவும் உறுதி கூறினர்

No comments:

Post a Comment