நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்களிடையே உள்ள தெளிவான இடைவெளியைக் காட்டி நிற்கிறது. தென்பகுதியில் அரசு சார்ந்த (ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) கட்சியும், தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நாட்டின் கடந்த 62 வருடகால வரலாற்றில் தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தாத கட்சிகளுக்கு தமிழ் மக்களது ஆணை கிடைக்கவில்லை. தேசியக் கட்சிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவை சிங்கள தேசியத்தையே வலியுறுத்துவதால் அவை எவற்றுக்கும் தமிழர் பகுதியில் இடமில்லை என்பதனை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் துலாம்பரமாக வெளிக்காட்டி நிற்கின்றன.
இலங்கை என்பது ஒரு தேசியம் என்பதனை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. கடந்த 62வருடங்களாக மட்டுமன்றி இந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் மக்கள் மீண்டும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அரசு சொல்வது போல் ஒரு தேசியம் ஒரு நாடு என்பதனை தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனால் இரு தேசியம் ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொள்வர்;. தமிழ்த் தேசியம் என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடிந்துவிடவில்லை என்பதனை ஆணித்தரமாக இத்தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்.
அரச வளங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் வடபகுதிக்கு வந்திருந்து தீவிரமாகப் பிரசாரம் செய்தது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அப்படியிருந்தும் மக்கள் அரச கட்சியை நிராகரித்துள்ளனர் என்பதற்கான காரணங்களை அரசு ஆராய வேண்டும்.

இவ் வெற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுக்கமான ஒழுங்குபடுத்தப்பட்ட பிரசாரத்தால் நிகழ்ந்ததல்ல. தமிழ் மக்களது ஏகோபித்த நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே உள்ளது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய வியூகம் அமைத்து மக்களிடையே சென்று பிரசாரம் செய்ததாக அறியவரவில்லை. இது மக்கள் செய்த அமைதியான புரட்சி என்றே கூற வேண்டும். சுயகௌரவம், சுயமரியாதை, தன்மானம் என்பவற்றுடன்; வாழ்வதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்யவேண்டும் என மக்கள் துணிவாக ஆணையிட்டுள்ளார்கள் என்றே கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் மெய்யான பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்பதனை தங்கள் வாக்குகள் மூலம் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை இலங்கை அரசும் சர்வதேசமும் சரியாகப் புரிந்து கொண்டு தமிழர் கோரும் தமிழ்த் தேசியம், தமிழ்நில அடையாளம், அதிகாரப்பரவலாக்கல் மூலம் சுயாட்சி என்பவற்றை விரைவில் வழங்கி இனவாதத்தால் புண்ணாகிக் கிடக்கும் இலங்கைத் தாய்ப்பூமியை புனிதபூமியாக எல்லோரும் நல்ல முறையிலும் நம்பிக்கையுடனும் செழிப்பாக வாழக்கூடிய பூமியாக மாற்றவேண்டும். இதுவே மக்கள் ஆணையாகும்.
உள்ளுராட்சித் தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் பெரிதும் அக்கறை காட்டினார்கள். புலத்தில் வாழும் எமது வேண்டுகோளை ஏற்று மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தமது உறவுகளிடம் பேராதரவைப் பெற்றுத் தந்தமைக்கு மிக்க நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம். உதவிய இணையத் தளங்களுக்கும் நன்றி. தொடர்ந்தும் தங்கள் ஆதரவைக் கோரி நிற்கின்றோம். ஜனநாயக வழியில் தென்னிலங்கைக்கும், சர்வதேசத்துக்கும் எமது உரிமைக்கான குரலை உரத்து ஒலிப்போம். இத் தமிழ்ப் பணிக்கு உதவிய உலகில் பரந்துள்ள உலகதமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத்திய குழுவுக்கும், கிளை அமைப்புக்களுக்கும், அதன் அனைத்து நிர்வாகிகளுக்கும் எமது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க இலங்கை கிளைத் தலைவர் பேராசிரியர் இரா.சிவசந்திரன்
தமிழ்த் தேசியம் என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடியவில்லை -பேராசிரியர் இரா.சிவசந்திரன்!
No comments:
Post a Comment